• Feb 23 2025

மிருணாள் தாகூருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்... அவரே சொன்ன ஷாக்கிங் நியூஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட பாலிவுட் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர், சீதா ராமம் படத்தின் மூலமாக தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை அடுத்து ஹாய் நானா படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


இப்படத்திற்கும் ஓரளவு நல்ல வரவேற்பு கொடுத்தனர். தற்போது மிருணாள் தாகூருக்கு தென்னிந்திய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மிருணாள் தாகூர், பாலிவுட்டில் இருக்கும் உறவுமுறை குறித்து பேசியுள்ளனர்.


அதில் அவர்,"இரவில் விருது விழா நடந்தது. அதை முடித்தவுடன் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் வாரிசு நடிகர்கள் நடிகைகள் அங்கு வந்தார்கள். உடனே பேட்டி எடுத்துக்கொண்டு இருந்த பத்திரிகையாளர்கள் அவர்களிடம் சென்றுவிட்டனர்".


"நேபோடிசம் என்ற பெயரில் அவர்களை பழி போட முடியாது. இதில் அவர்களுடைய தவறு எதுவும் இல்லை. மீடியா வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்" என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார். அங்கு பேட்டி நடக்கிறது. அதனை முடித்து விட்டு செல்ல வேண்டும். இப்படி செய்வது எங்களை அவமதிக்கிறது என கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement