• Jan 19 2025

ஸ்டேஷனில் லாயர் காட்டிய ப்ரூப்.. பர்மிஷன் கொடுத்தது மனோஜா? வெளுத்து வாங்கிய ஜீவா

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், மீனாவின் வண்டியை போலீசார் தூக்கிச் சென்ற நிலையில், ஸ்டேஷன் சென்ற மீனா வண்டியை தொட்டு பார்த்து கண் கலங்குகிறார். மேலும் வண்டிக்குள்ள பூவெல்லாம் இருக்கு  தயவு செஞ்சு வண்டியை கொடுங்க என்று கேட்க, எஸ்ஐ தான் வரணும் அவர்கிட்ட பேசிக்கோங்க என்று சொல்ல, மீனா முத்துவுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் மனோஜ், ரோகிணி, ஜீவா மூன்று பேரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இறங்க அவர்கள் நேரடியாகவே உள்ளே சென்று விடுகிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அதன் பின் மீனா முத்துவுக்கு போன் பண்ணி நோ பார்க்கிங்கில் வண்டியை விட்டுட்டேன் என்று சொல்ல, முதலில் மீனாவை திட்டுகிறார் முத்து. அதன் பின்பு மீனா, நீங்க ஆசையா வாங்கி தந்த வண்டி என அழ கிளம்பி வருகிறார் முத்து.


இதைத்தொடர்ந்து ஜீவாவை போலீசார் விசாரிக்க பணம் கொடுக்க முடியாது என்று சொல்கிறார். மேலும் நான் போன பின்னாடி வாரேன்னு சொல்லிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று மனோஜ் மீது பழியை போடுகிறார். அவனோட ஆறு மாசம் வாழ்ந்ததுக்கு அந்த காது சரியா போச்சு என சொல்ல, உனக்கு அசிங்கமா இல்லையா பணத்துக்காக இப்படி பண்ணுவியா என ஜீவாவை ரோகிணி திட்டுகிறார்.

ஆனாலும் ஜீவா லோயரை கூப்பிட்டு பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்ல, அங்கு வந்த லோயரும் மனோஜ்ட பர்மிஷன் ஓட தான் இந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு அதுல ஆதாரத்தை காட்டுகிறார்.

இதனால் நீங்க என்ன வேணாலும் பண்ணிக் கொள்ளுங்கள் நான் பணத்தை தர மாட்டேன் என்று ஜீவா சொன்னதோடு மட்டும் இல்லாமல் ஒரு வருஷம் இவரோட வாழ்ந்துட்டேன் அதற்கான காம்போசிஷன் தான் அந்த பணம் என்று சொல்லுகிறார்.

அதன் பின்பு பணத்தை கட்டி வண்டியை எடுத்துப் போவதற்காக வெளியில் முத்துவும் மீனா காத்திருக்க, உள்ளே லாயர் ஜீவாவை கூட்டிச் சென்று நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க உங்களோட கேரக்டர நீங்களே தரம் தாழ்த்துறீங்க என்று அட்வைஸ் பண்ணுகிறார்.

இறுதியாக மனோஜிடம் நீங்க என்ன சொல்றீங்க என்று லாயர் கேட்க, எனக்கு பணம் வேணும், பணத்தை தந்துட்டு தான் அவ ஸ்டேஷன்ல இருந்து வெளியே போகணும் என்றும் சொல்லுகிறார்.

இறுதியாக ஜீவா ஓவராக பேசிக் கொண்டிருந்ததை பார்த்த போலீஸ், இப்பவே நீங்கதான் தப்பு செஞ்சு இருக்கீங்க என்று விளங்குது. நான் நெனச்சா உங்கள உள்ள தூக்கி போட முடியும். உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் இங்க வச்சே சமாதானமா பேசி போங்க என்று சொல்ல, லோயர் ஜீவாவை தனியா கூட்டிக்கொண்டு கதைக்க சொல்கிறார். அதற்கு எதிர் பக்கத்தில் முத்துவும் மீனாவும் இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement