• Mar 03 2025

சிக்கலில் சிக்கிய சிவாஜி குடும்பம்..! வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமையாக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பம் தற்போது ஒரு பெரிய சட்ட பிரச்சனைக்குள் சிக்கியுள்ளது. ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தின் பட்ஜெட்டுக்காக எடுத்த கடன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் திரையுலகத்திலும், ரசிகர்கள் மத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு 'ஜகஜால கில்லாடி' என்ற திரைப்படத்தை தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. அந்தப் படத்திற்காக ரூ. 3.74 கோடி கடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்தக் கடன் நிரந்தரமாக செலுத்தப்படாமல் போனதால் அதன் வட்டி சேர்ந்து தற்பொழுது பெரிய தொகையாக மாறியுள்ளது .


கடன் வசூலிக்க முடியாத சூழ்நிலையில், மத்தியஸ்தராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். இதன்படி, கடன் தொகையும், அதன் வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 9.39 கோடியை செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு தற்பொழுது வெளியாகியது. இதற்காக, ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்றத்தில் இருந்து பல முறை அறிவிப்பு வந்தபோதும், சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கடன்சுமையை தீர்க்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக அவர்களின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவின் பெருமைமிக்க நடிகராக, தனது திறமையான நடிப்பால் உலகளவில் பிரபலமடைந்தவர். அவரின் பெயருடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் ரசிகர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் ஒரு விஷயமாகும். அவரது குடும்பம் இவ்வளவு பெரிய கடனை ஏன் செலுத்தாமல் விட்டது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Advertisement

Advertisement