தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் தனது 70வது வயதிலும் கதைகளின் தேர்வில் எந்த மாற்றமும் இன்றி மொத்தமாக 7 படங்களில் நடிக்க உள்ளார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நடிப்பின் தீவிரம் மற்றும் திரை உலகத்திற்கு அவர் காட்டும் அன்பு என்பன தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் விஷயமாக உள்ளன.
சமீபகாலமாக கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். எனினும் தற்போது அவர் முழுமையாக திரைத்துறையையே முன்னிலைப்படுத்தி வருகிறார். 2022 ஆம் ஆண்டு வெளியான "விக்ரம்" திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததோடு கமல் ஹாசன் மீண்டும் தனது திரையுலகில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அத்துடன் தற்போது, "தக் லைஃப்" திரைப்படம் ஜூன் 5, 2025 திரைக்கு வரவிருக்கிறது. இதற்குப் பிறகு, தொடர்ந்து 7 படங்களில் நடிக்க உள்ளார் என்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக காணப்படுகிறது. குறிப்பாக, KH 237 , கல்கி 2 மற்றும் இந்தியன் 3 போன்ற படங்கள் கமலுக்கு வெற்றியை அளிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
கமல் ஹாசன் தனது வயதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் திரைத்துறையில் சாதனைகள் படைத்து வருவது தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதப்படுகிறது. அவரது நடிப்பு, தேர்வு செய்யும் கதைகள் மற்றும் அவரது புதிய சவால்கள் அனைத்தும் திரையுலகத்துக்கு ஒரு முக்கியமான உத்வேகமாக உள்ளது எனப் பலரும் நம்புகின்றனர்.
Listen News!