• Mar 03 2025

ரஜினி ஒரு லெஜெண்ட் அவரை விஜயுடன் ஒப்பிடக்கூடாது..! ஷாமின் அதிரடிப் பேச்சு!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஷாம், திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றி பயணங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார். ஒரு சிறிய திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள SK ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். இதைப் பற்றி ஷாம் கூறியதாவது, "சிவகார்த்திகேயனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் எந்த விதமான பின்னணியுமில்லாமல் முழுக்க தனது முயற்சியால் முன்னேறியவர். இது மிகவும் பாராட்டத்தக்கது " என்றார்.


ஷாம் மேலும் , "சிவகார்த்திகேயன் இன்று வளர்ந்து வரும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவரை விஜய் அண்ணாவோடு ஒப்பிடக் கூடாது என்றதுடன் விஜய் அண்ணா தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் என்றார். அதைப் போன்று நாங்கள் விஜய் அண்ணாவையே ரஜினி சாருடன் ஒப்பிடக் கூடாது என்றார். அத்துடன் "ரஜினி சார் ஒரு லெஜெண்ட். அவருடைய பயணமும் சாதனைகளும் யாராலும் எட்ட முடியாத அளவுக்கு அவர் ஒரு பெரிய மனிதர் என்றதுடன் அத்தகைய ஒருவரை  விஜய் அண்ணாவுடன் ஒப்பிடுவது தவறு" என்றார்.

Advertisement

Advertisement