விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் யோகி பாபு, கௌரி ஜி. கிஷன், மிஷ்கின், சீமான், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி, ஷரா, முகமது ரசூல் மற்றும் எடின் ரோஸ் ஆகியோருடன் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பனி
இப் படத்தில், ஒரு இளைஞன் தனது காதலுக்காக 2035 ஆம் ஆண்டுக்கு மொபைல் கேஜெட் மூலம் பயணம் செய்கிறான்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன் சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் அனிருத் பாடிய "demaa "பாடல் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் "நான் நினைப்பது போல திரைப்படம் எடுக்க முடியவில்லை என்றால் அதை நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் நான் சந்தித்துள்ள வீழ்ச்சி மிகப்பெரியது. LIK படமே ட்ராப் செய்யப்பட்ட படம் தான். 2016ல் நடிகர் சிவர்த்திகேயனை வைத்து அந்த படம் தொடங்க வேண்டியது. இது ஒரு எதிர்காலம் குறித்த பற்றிய படம் என்பதால் அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் லைகா ப்ரொடக்ஷன் இந்த படத்தை PRESENT இல் நடப்பது போல எடுக்க சொன்னார்கள். இருப்பினும் அதை எப்படி மாற்ற முடியும்? பாகுபலி படத்தை நிகழ்கால கதை போல எடுக்க முடியுமா? "என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!