• Dec 07 2024

தகாத முறையில் தீண்டல்... பாலிவுட் முக்கிய நடிகர் கைது...

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் நடிகராகவும் உதவி இயக்குனராகவும் இருப்பவர் நடிகர் ஷரத் கபூர். இவர் 'லக்ஷ்மண் ரேகா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் 'கார்கில் எல்ஓசி மற்றும் லக்ஷ்யா' ஆகிய படங்களில் குறிப்பாக ஷாருக்கான் நடித்த 'ஜோஷ்' படத்தில் நடித்துள்ளார்.


இதற்கிடையில், நடிகர் ஷரத் கபூர் மீது, தவறான நடத்தை மற்றும் ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நடிகர் ஷரத் கபூர் மீது 32 வயதான பெண் ஒருவர் மும்பை கர் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.  அதில், ஷரத் கபூர் தன்னை தனது வீட்டிற்கு அழைத்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். 


இதனால் போலீசார் ஷரத் கபூரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு கூடிய விரைவில் வெளியாகுமென போலீசார் அறிவித்துள்ளார். 




Advertisement

Advertisement