• Apr 16 2025

நயன்தாராவுடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டார்...! ரசிகர்களுக்கு சப்பிரைஸ் கொடுத்த படக்குழு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் வெற்றிகரமான படங்களைக் கொடுத்துவருகின்றார். தனது நடிப்பு மற்றும் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது ''Dear Students' என்ற திரைப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

2023ல் வெளிவந்த 'ஜவான்' திரைப்படத்தில் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிந்தி திரைப்பட உலகில் தனது நடிப்புத்திறனை அழுத்தமாகப் பதித்திருந்தார்.


அட்லீ இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ரூ.1,100 கோடிக்கும் மேலாக வசூலித்து ஹிந்தி திரைப்பட வரலாற்றில் சாதனையைப் படைத்தது. இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு மற்றும் ஆக்சன் என்பன  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.


இந்த வெற்றியைத் தொடர்ந்து, மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலியுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘Dear Students’ என்ற திரைப்படம், கல்லூரி மற்றும் கல்வி சூழலை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இதில் நயன்தாரா ஒரு ஆசிரியையாக தனது திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத புதிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘Dear Students’ என்பது ஒரு காதல் படம் அல்ல அது ஒரு கல்லூரி வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றது. இதில் நயன்தாரா மற்றும் நிவின் பாலி நடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement