தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜ் 'பாகுபலி' படத்தில் கட்டப்பா எனும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டார். அந்தக் கட்டப்பா, தற்போது மீண்டும் பாலிவூட் திரையுலகில் கலக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் 'சிக்கந்தர்' படத்தின் முதலாவது போஸ்டர் வெளியீட்டு விழா நிகழ்ந்திருந்தது. இந்நிகழ்வில் பாலிவூட் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். எனினும், எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அங்கு அனைவரின் கவனத்தையும் நடிகர் சத்தியராஜ் மாற்றியிருந்தார்.
இந்த விழாவிற்காக சத்யராஜ் தேர்ந்தெடுத்திருந்த உடைதான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. கறுப்பு நிற ஆடையில் ஒரு சிங்கம் போல அந்நிகழ்வில் தோன்றியிருந்தார். பாகுபலியில் வந்த கட்டப்பா போலவே அந்நிகழ்ச்சியில் கலந்திருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் "கட்டப்பா திரும்ப வந்திட்டார்.." என்று கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஹிந்தி ரசிகர்களிடையே அவருக்கு ஏற்பட்டுள்ள புகழ் இன்னும் குறையாமல் காணப்படுகின்றது என்பதனை இதன் மூலம் அறியமுடிகிறது.
Listen News!