• Jan 19 2025

லாரன்ஸை வைத்துக்கொண்டு கால்களால் கார் ஒட்டிய ரசிகர்! வீடியோ வைரல்

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பல பிரபலங்கள் தங்களிடம் உள்ள பணத்தை ரசிகர்களுக்காக , ஏழை மக்களுக்காக செலவிடுகிறார்கள்  அவ்வாறே சமீபத்தில் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ  நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து நடிகர் , இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்குபவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவருக்கு தெலுங்கிலும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதோடு தமிழில் இவர் நடிக்கும் பேய் படங்களுக்கு என்று தனி மார்க்கெட் உள்ளது எனலாம்.


இவ்வாறு இருக்கும் லாரன்ஸ் மாஸ்டர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு கைகளும் இல்லாத ஊனமுற்ற ரசிகர் ஒருவருடன் காரில் சென்றுள்ளார். குறித்த ரசிகர் கைகள் இல்லாமல் கால்கள் மூலம் மட்டுமே காரை ஒட்டியுமுள்ளார். குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது 


Advertisement

Advertisement