• Jun 24 2024

இரண்டு மாதங்களுக்குள்ளேயே ரீ ரிலிஸ் செய்யப்படும் ஹாட் ஸ்பாட் திரைப்படம்.

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன் , சோபியா, சாண்டி, அம்மு அபிராமி , ஜனனி , கௌரி ஜி. கிஷன் , சுபாஷ் மற்றும் ஆதித்ய பாஸ்கர் என பெரும் நட்ச்சத்திரங்களின் இணை நடிப்பில் கடந்த மார்ச் மாதம் இருபத்தொன்பதாம் திகதி திரையரங்குகளில் வெளியானது ஹாட் ஸ்பாட் திரைப்படம்.


கலவையான விமர்சனங்களுக்கு உள்ளான இத் திரைப்படம் சமூக வலைத்தளங்களிலும் சமூக நேய தரப்பினரிடம் இருந்தும் பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது.திரை விமர்ச்சகர் ஒருவர் "ஒட்டுமொத்தத்திலும், ஹாட் ஸ்பாட் ஒரு பெண்ணியத் திரைப்படமாகும், அது பதில்களை வழங்குவதை விட அதிகமான கேள்விகளை எழுப்புகிறது" என்று எழுதிஇருந்தார்.என்னான போதும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.


இந்நிலையில் மூன்று கதைகளாக பிரிக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாவது கதையான கோல்டன் ரூல்ஸ் இன் முன்னிருந்த கிளைமாக்ஸ் காட்சிகள் நீக்கப்பட்டு படமானது ரீ ரிலிஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அந்தவகையில் இன்று 11 மணியளவில் வெளியாகிறது மாற்றியமைக்கப்பட்ட ஹாட் ஸ்பாட் திரைப்படம்.

Advertisement

Advertisement