• Jan 19 2025

நடிகையிடம் கைவரிசையை காட்டிய இயக்குனர்... படம் இயக்குவதற்கு தடை... பத்மப்ரியா வேதனை!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பல நடிகைகள் சினிமாவில் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்களை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மலையாள  நடிகை பத்மபிரியா தமிழ் படம் ஒன்றில் நடித்த போது தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் கூறும்போது, 'தமிழில் நான் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு நிறைவடைந்த போது அந்த படத்தின் இயக்குனர் அனைவரின் முன்னிலையிலும் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால் மீடியாக்களில் நான் அவரை அறைத்ததாக செய்திகள் வெளியாகின இது குறித்து நான் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன்.


அந்த இயக்குனர் ஆறு மாதம் படம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டார். நானே அடித்து விட்டு நானே எதற்காக புகார் கொடுக்க வேண்டும் என யாருமே கேள்வி எழுப்பவில்லை" என்று கூறியுள்ள பத்மபிரியா அந்த இயக்குனரின் பெயர் குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை.  அவர் தமிழில் அதி கதாநாயகனாக அறிமுகமாகிய மிருகம் படத்தில் இயக்குனர் சாமியின் டைரக்ஷனில் கதாநாயகியாக நடித்தபோதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement