• Oct 26 2025

குக் வித் கோமாளிக்கு மூடுவிழா நடத்திய விஜய் டிவி! விரைவில் புதிய குக்கிங் ஷோ ஆரம்பம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசனில் பிரியங்கா தான் டைட்டிலை வெற்றி பெற்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பைனலில் பிரியங்கா, விடிவி கணேஷ், சுஜிதா, பூஜா, ஷாலினி சோயா, இர்ஃபான் ஆகியோர் பங்கு பற்றினார்கள். இதில் சிறப்பாக சமைத்த பிரியங்கா தேஷ்பாண்டிடே குக் வித் கோமாளி டைட்டிலை வெற்றி பெற்றார். அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பண  பரிசும், இரண்டாவதாக வெற்றி பெற்ற சுஜிதாவுக்கு ஒரு லட்சமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில், புதிதாக ஒரு சமையல் நிகழ்ச்சியை விஜய் டிவியில் ஆரம்பிக்க உள்ளனராம். இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் செப் தாமு ஆகியோர் தலைமை தாங்க உள்ளார்கள். 


மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பற்றிய மணிமேகலை விலகிய நிலையில் அவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் ஒருவரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.

அதன்படி மணிமேகலைக்கு பதிலாக ஜாக்குலின் இந்த நிகழ்ச்சியை ரக்சன் உடன் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஜாக்குலின் ரக்ஷனுடன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். தற்போது மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். குக்கிங் வித் விஜய் ஸ்டார் என்ற பெயரில் இந்த ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisement

Advertisement