• Jan 19 2025

பாடகி சைந்தவியை விடாமல் நச்சரித்த விஜய் பட இயக்குனர்? பின்னணி காரணம் இதுவா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக தனது அற்புதமான குரல் மூலம் பலரையும் தன் பக்கம் ஈர்த்தவர் தான் பாடகி சைந்தவி.  சைந்தவிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக செயல்படுவதும் ஒரு காரணமாகும்.

பாடகி சைந்தவி பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷை பள்ளி பருவத்திலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. எனினும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரிந்து வாழ போவதாக விவாகரத்து  தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டார்கள். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது ஜிவி பிரகாஷை பிரிந்து வாழும் சைந்தவி பற்றி அண்மையில் தளபதி விஜய் வைத்து கோட் திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

அதாவது வேண்டாம் என்று சொல்லியும் விடவே இல்லை என்ற விஷயத்தை எதற்காக சொன்னார் என்பதை பற்றிய விரிவான பதிவை பார்ப்போம்.


அதாவது கோட் பட இயக்குனர் ஆன வெங்கட் பிரபு சிறுவயதிலிருந்தே சைந்தவியை நன்றாகத் தெரிந்த நபராக காணப்படுகின்றார். மேலும் சென்னை 28 முதல் பாகத்தில் நடிகை விஜயலட்சுமி ரோலில் நடிக்க சைந்தவியை தான் வெங்கட் பிரபு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்தும் வெங்கட் பிரபு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனாலும் எனக்கு நடிப்பு வரவே வராது என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சி கேட்டுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக வருகின்றது.

அத்துடன் இந்த விஷயத்தை சைந்தவி வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்லி இருக்கின்றாரே? என்ற ரீதியில் ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றார்கள். ஒருவேளை சைந்தவி சென்னை 28 படத்தில் நடித்திருந்தால் இன்று பாடகி என்ற நிலையைத் தாண்டி நடிகையாகவும் உயர்ந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement