• Jan 18 2025

சத்தமின்றி திருமணம் செய்த நடிகர் சித்தார்த் - அதிதி ராவ்..! இணையத்தை கவர்ந்த போட்டோஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை என்ற படத்தில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதிதி ராவ். ஆனாலும் இவருடைய முதல் படம் சிங்காரம் தான். அதன் பிறகு  'செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா' உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். 

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார். 

நடிகை அதிதி ராவ் தனது 21 வது வயதிலேயே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அதேபோல நடிகர் சித்தார்த்தும் ஏற்கனவே திருமணம் ஆகி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.


அதன் பின்பு அதிதி ராவுக்கும் சித்தார்த்துக்கும் இடையே காதல் மலர இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். இடையில் இவர்களுக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வைரலாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது நடிகர் சித்தார்த் - அதிதி ராவ் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement