• Oct 08 2024

இது தான் கர்மா.. அனிதா சம்பத் போட்ட செருப்படி பதிவு பிரியங்காவுக்கா? மணிமேகலைக்கா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன்  நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை திடீரென விலகி இருந்தார். அதற்கு காரணம் தனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என்னுடைய வேலையில் குக்காக இருக்கும் தொகுப்பாளினி ஒருவர் அடிக்கடி இடையூறு செய்வதாக வெளிப்படையாகவே பதிவு ஒன்றை இட்டிருந்தார்.

இவ்வாறு மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து இதற்கு முக்கிய காரணம் பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரியங்கா விஜய் டிவியில் அதிக ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஏனைய தொகுப்பாளினிகளை வளர விடாமல் நடுத்தெருவுக்கு விட்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் தற்போது பிரியங்கா பற்றிய நல்ல விமர்சனங்களும், அவர் அளித்த பேட்டிகளும், அடுத்தவரின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த முயற்சிகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் விஜய் டிவியில் காமெடி நடிகராக இருந்த தீனா தான் முன்னேறுவதுற்கு பிரியங்கா மிகவும் உறுதுணையாக இருந்தார் என சொல்லி இருப்பார். இவ்வாறு பல வீடியோக்கள் தற்போது பிரியங்காவுக்கு ஆதரவாக வைரலாகி வருகின்றன.


இந்த நிலையில், செய்தி வாசிப்பாளராகவும் பிக் பாஸ் பிரபலமாகவும் காணப்படும் அனிதா சம்பத் தனது இன்ஸ்டா  பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார்.

அதில் யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கின்றாரோ அவர் அதை போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார் என அதிரடியாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவு மணிமேகலைக்கா அல்லது பிரியங்காவுக்கா என குழம்பி போய் உள்ளார்கள். ஆனாலும் மணிமேகலை சோவில் இருந்து விலகுவதாக போட்ட பதிவில் "Guts🔥all the best mani" என அனிதா கமெண்ட் செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.


Advertisement