கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். மேலும் இதில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முதலாக 3D தொழில்நுட்பத்துடன் கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனாலும் இந்த படத்தின் கதை ரசிகர்களை சலிப்படைய வைத்துள்ளது. வசூல் ரீதியாகவும் கங்குவா திரைப்படம் சரிவை சந்தித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா. மேலும் ஆர்.ஜே பாலாஜியுடன் தனது 45 ஆவது படத்திற்காக இணைந்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
காதல், ஆக்சன் கலந்த வித்தியாசமான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகியுள்ளதோடு எதிர்வரும் உழைப்பாளர் தினமான மே முதலாம் தேதி அன்று ரெட்ரோ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். கங்குவா படத்தின் தோல்வியால் துவண்ட சூர்யாவுக்கு இந்த படம் தரமான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரெட்ரோ பட நாயகி பூஜா ஹெக்டே வழங்கிய பேட்டியில், பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து பிளாக் ஆன ராதே ஷியாம் படத்தின் மூலம் தான் தனக்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார்.
அந்த படத்தில் நடித்த காட்சியை பார்த்து இம்ப்ரஸ் ஆனதால் தான் கார்த்திக் சுப்புராஜ் தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
Listen News!