• Jan 19 2025

இறுதி நேரத்தில் எதிர்ப்பாராத ட்விஸ்ட் கொடுத்த செஃப்? உண்மையை புட்டு புட்டு வைத்த பாக்கியா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி  ரெஸ்டாரண்டில் ஆயுத பூஜைக்கான ஆர்டர் நடைபெற்றுக் கொண்டிருக்க  எழிலின் பட பூஜையில் நடந்ததை பற்றி பாக்கியா யோசித்து கவலையாக இருக்கின்றார். செல்வி இதைப் பற்றி கேட்கவும் இப்போது இதைப் பற்றி கதைக்க வேண்டாம் என்று வேலையை பார்க்கின்றார்

அதன் பின்பு விறுவிறுப்பாக ஆயுத பூஜைக்கான வேலைகள் அத்தனையும் நடைபெற்று முடிகின்றது. மறுநாள் காலையில் வண்டி வந்ததும் அவற்றை எல்லாம் ஏற்றி அனுப்பி விடுகின்றார். அதன் பின்பு பாக்கியா ரெஸ்டாரண்டில் வேலை செய்தவர்களை அழைத்து ஆர்டர் செய்து முடிக்க மட்டும் துணையாக இருந்ததற்கு நன்றி கூறுகின்றார்.

அந்த நேரத்தில் செப்புக்கு கோபிநாத் கால் பண்ணுகின்றார். அப்போது பாக்யா அதை கவனித்து விட்டு போனை ஸ்பீக்கரில் போடுமாறு சொல்லுகின்றார். மேலும் செல்வியிடம்  பிரியாணி பிரச்சனையில் என்ன நடந்தது என்று இப்போது தெரியும் என்று சொல்ல, கோபிநாத் லட்டுல என்ன கலந்தீங்க? பிரியாணியில் பழைய கறியை கலந்தீங்க என்று எல்லாவற்றையும் உளறி கொட்டுகின்றார்.

d_i_a

இதை கேட்டு செல்வி செப்பை இழுத்து வைத்து அடிக்கின்றார். ஆனாலும் தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்று ட்விஸ்ட் கொடுக்கின்றார் பாக்கியா. அதாவது செப் வேலைக்கு வராத போது தான் அவருடைய வீட்டுக்கு சென்றதாகவும் அங்கு தமது ஹோட்டலில் சமைத்த பிரியாணியை செப்பின் மகள் சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதன்பின் செஃப் மனம் மாறி  உண்மையை சொன்னதாகவும் சொல்லுகின்றார்.


இதை தொடர்ந்து தான் வழமை போல அவரை வேலைக்கு கூப்பிட்டதாகவும் கோபியிடம் வழமை போல பேசுமாறும் சொன்னதோடு தனக்கு மட்டும் விசுவாசமாக இருக்குமாறு செப்புக்கு சொன்னதாக பாக்கியா சொல்லுகின்றார். இதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இறுதியாக தான் வருகின்றேன் என்று ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்பி செல்கின்றார் பாக்யா. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement