ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் 2014 ம் ஆண்டு உருவான படமே கத்தி. இப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அத்துடன் விஜய் அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கத்தி திரைப்படம் வெளியான காலத்தில் அதிகளவான வசூலைப் பெற்றிருந்தது.
அந்த வகையில் தற்போது கத்தி படத்தில் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷ் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில் முகேஷ் , படம் ஒன்றில் நடிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அதன் போது நியூஜோர்க் நாட்டின் விமான நிலையத்தில் என்னை பொலிஸ் தடுத்து நிறுத்தி விட்டார்கள் என்றார்.
மேலும் எனது பாஸ்போட்டைக் காண்பித்தும் அவர்கள் என்னை நம்பவில்லை. கிட்டத்தட்ட 4 மணிநேரமாக என்னை காத்திருக்க வைத்தார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இறுதியில் என்னைப் பற்றி கூகுளில் search பண்ணி பாருங்க அப்பதான் உங்களுக்கு நான் யார் என்ற விடயம் தெரியும் என்றார்.
அதற்கு பின்னர் தான் அவர்களுக்கு தாங்கள் செய்த தவறு விளங்கியது என்றதுடன் பிறகு தன்னை ஷூட்டிங் செல்வதற்கும் அனுப்பினார்கள் என்றும் தனது சோகத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
Listen News!