காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வருகின்றார் யோகி பாபு. இவர் காமெடியனாக மட்டுமில்லாமல் எமோஷனலாகவும் நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகின்றார். இவரின் காமெடி டயலொக்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது..
ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு, தற்போது கதாநாயகன களமிறங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் யோகிபாபுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலாக இருந்தது.
d_i_a
தமிழில் இவருடைய நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, கூர்கா, போர்ட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.. மேலும் இவர் பெண் வேடம் அணிந்தும் படத்தில் நடித்து தனது ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில், பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் தற்போது தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சந்தானம் இல்லாத காமெடி காட்சிகள் ரசிக்கக்கூடிய வகையில் இல்லை. அதுவும் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் எடுபடவே இல்லை என தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழ் சினிமாவிலேயே தற்போது காமெடி நடிகர்களின் பங்கு குறைந்துள்ளது. சந்தானத்தின் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும் அவர் தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இதனால் அவர் காமெடி காட்சிகளில் பெரிதாக ஈடுபடுவதில்லை.
இவ்வாறு யாருமே போட்டி இல்லாத காமெடி நடிகராக யோகி பாபு காணப்படுகின்றார். ஆனாலும் அவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார். எனினும் இவர் நடிக்கும் படங்களில் காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. நடிகர் சூரியும் காமெடியனாக இருந்து தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!