இலங்கையில் பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றியவர் தான் ஜனனி. இவருக்கு கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக சென்னைக்கு புறப்பட்டார். தற்போது சினிமாவில் மிகவும் பிஸியான ஒரு நடிகையாக காணப்படுகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனிக்கு முதலாவது பட வாய்ப்பு விஜய் - த்ரிஷாவுடன் நடிப்பதற்கு கிடைத்தது. இது அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே கருதப்பட்டது. முதலாவது படமே விஜய் உடன் நடித்ததால் இவருடைய பெயரும் மதிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
லியோ படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார் ஜனனி. அதுவரையில் ஆல்பம் சாங், போட்டோ ஷூட் எடுப்பது என பிசியாக காணப்பட்டார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் உசுரே திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ஜீ தமிழ் சீரியல் நடிகர் ஆன ஆரியனுடன் படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இதற்கான பட பூஜையும் சமீபத்தில் நடைபெற்று புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், நடிகை ஜனனியின் புதிய போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அதில் ஆரஞ்சு கலர் சேலையில் செம கலக்கலாக காணப்படுகின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!