• Sep 19 2025

GT4 ரேஸுக்குத் தயாராகும் தல..! அஜித்தின் புதிய பதிவு இணையத்தில் வைரல்!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பிரபலமான அஜித் குமார், தனது திரையுலக சாதனைகளுக்கு அப்பால்,கார் மற்றும்  பைக் ரேஸ்  உலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் மூலம் சமீபத்தில் திரையில் கவனம் பெற்ற அவர், தற்போது தனது அடுத்த திரைப்படமான AK  64க்கான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில், அஜித் குமார் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியிருந்தது. “வார இறுதி பந்தயங்கள் ஏற்றப்படுகின்றன. நாங்கள் மிசானோ வேர்ல்ட் சர்க்யூட்டை அடைந்துவிட்டோம், மேலும் GT4 ஐரோப்பிய தொடரின் அடுத்த சுற்றுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்! வார இறுதியில் இரண்டு ஒரு மணி நேர ஸ்பிரிண்ட் பந்தயங்களை எதிர்பார்க்கலாம் . என பதிவிட்ட  பதிவு வைரலாகி வருகின்றது. 


மேலும் அஜித்தின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .அஜித் குமார் ரசிகர்கள், அவரின் Ajith Kumar Racing யூடியூப் சேனலைச் சேர்ந்து, வார இறுதியில் நடைபெறும் ரேசிங் நிகழ்வுகளை நேரலையாக காணலாம் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 



Advertisement

Advertisement