தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் முதல் ஆறு இடங்களில், ஐந்து சன் டிவி சீரியல் இடம் பெற்று இருப்பதாகவும் ’சிறகடிக்க ஆசை’ மட்டுமே விஜய் டிவியின் மானத்தை காப்பாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சன் டிவியின் சீரியல்களை எந்த டிவியும் முறியடிக்க முடியவில்லை என்றும் டிஆர்பியில் சன் டிவியின் சீரியல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ உட்பட ஒரு சில சீரியல் டிஆர்பியில் சன் டிவிக்கு போட்டி போட்டாலும் மற்ற சீரியல் சன் டிவி பக்கமே வர முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ’மல்லி’ சீரியல் இந்த வாரம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. மீனா மற்றும் முத்து கேரக்டர்கள் டம்மி ஆக்கப்படுவதும் ரோகிணி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் இந்த வாரம் ’சிறகடிக்க ஆசை’ பின்தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்த புத்தம் புது சீரியலான ‘மருமகள்’ இந்த வாரம் இரண்டு இடங்கள் பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதே போல் கடந்த சில மாதங்களாக நான்காவது இடத்தில் இருந்து ’வானத்தை போல’ சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதேபோல் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்த ’சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தில் இருந்த ’கயல்’ சீரியல் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
மொத்தத்தில் முதல் ஆறு இடங்களில் உள்ள சீரியலில் சன் டிவி சீரியல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது என்பதும் விஜய் டிவி மானத்தை ’சிறகடிக்க ஆசை’ என்ற ஒரே ஒரு சீரியல் மட்டுமே காப்பாற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!