• Jan 19 2025

முத்து முடிச்ச பிரச்சினையை மீண்டும் கிளறிவிட்ட மீனா.. ஏமாற்றத்தில் ரோகிணி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து இனி இந்த ரூமால பிரச்சனை வேணாம். நீ நிம்மதியாய் இருப்பா, நாங்கள் தரையிலையோ மொட்ட மாடிலயோ படுத்து தூங்குகிறோம். என்னால் முடியும் போது கொஞ்சம் கொஞ்சமாக ரூமை கட்டுவதாக சொல்ல, இப்ப சரி ஞானம் வந்துடுச்சு என விஜயா சொல்லுகிறார்.

அத்துடன் ரோகிணியும் ஏற்கனவே போட்ட சபதம் முடியல அதுக்குள்ள இன்னொரு சபதத்தை போடாதீங்க என்று நக்கலாக  பேச, உடனே ரோகினி அவர் சொந்த பணத்தில் ரூம் கட்டுவார் என்று சபதம் போடுகிறார். மேலும் இது மாமா மேல சபதம் என்று சொல்லி செல்கிறார்.

இதனால் கோவமடைந்த முத்து, எதுக்கு என்ன கேட்காமல் சபதம் போட்டா கேட்க, அப்படி சொல்லலைன்னா மாமா சும்மா இருக்க மாட்டார் என்று மீனா சொல்லுகிறார். அதுவும் சரிதான் ஆனாலும் ஏற்கனவே போட்ட சபதம் முடியல, இது பார்ட் 2 வா? எப்படி நம்மளால ரூம் கட்ட முடியும் என்று கேட்க, உங்களால கண்டிப்பா முடியும் என ஊக்கம் கொடுக்கிறார் மீனா.

அடுத்து கடைக்கு போன ரோகிணி கல்யாணம் ஒன்றிற்காக மனோஜையும் வருமாறு அழைத்து, நாம தனியாவே இருக்க முடியல ஜாலியா போயிட்டு வருவோம் என்று சொல்லுகிறார். மனோஜம் சரி என்று சொல்ல, அந்த நேரத்தில் மனோஜ்க்கு கஸ்டமர் ஒருவர் கால் பண்ணி நாலு லட்சத்துக்கு ஆர்டர் கொடுக்கிறார். இதனால் தான் கல்யாணத்துக்கு வரவில்லை என்று மனோஜ் சொல்லுகிறார்.


அதன் பிறகு வீட்டுக்கு வந்த முத்து, மீனாவை கீழே வர சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கிறார். அதாவது தன்னிடம் சவாரி வந்த ஒருவர் காசுக்கு பதிலாக செங்கற்களை தந்ததாகவும் இதனால் கொஞ்சம் கொஞ்சமா செங்கற்களை எடுத்து வந்து ரூம்  கட்டுவோம் என பிளான் போட, மீனாவும் தன்னுடைய கஷ்டமர் ஒருவர் சீமேந்து விற்பதாகவும் அதையும் வாங்கி சேர்ப்போம் என சொல்லுகிறார்.

இதனால் வீட்டுக்குள் இருவரும் செங்கற்களை தூக்கிக் கொண்டு போக, விஜயா இதை பார்த்து இப்படி கட்ட வெளிக்கிட்டா  அறுபதாவது கல்யாணத்துக்கு தான் கட்டி முடிப்பீங்க என்று சொல்ல, சிரித்துக் கொண்டே மீனா அப்படியென்றால் 60வது  கல்யாணம் மட்டும் இங்கு இருப்பன் என்று ஆசீர்வாதம் பண்ணுவீங்களா என்று அதனை பாசிட்டிவாக எடுத்து விட்டு செல்கிறார்.

இறுதியாக இருவரும் கொண்டு வந்த செங்கற்களை வைத்து அடுக்கி அதனை அழகு பார்க்கின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement