சினிமா துறையில் ஹீரோக்களின் பங்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு குணச் சித்திர கதாபாத்திரங்கள், காமெடியர்களின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. பல கதைகளில் தூணாக இருப்பதும் அவர்கள் தான் பல கதாபாத்திரங்களை கொண்டு நகர்த்த வேண்டிய பொறுப்புகளும் அவர்களுடையதாகவே காணப்படும்.
அந்த வகையில் குணச்சித்திர நடிகர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக காளி வெங்கட் காணப்படுகின்றார். இவர் காமெடியனாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிக்கும் படங்களில் இவருடைய கதாபாத்திரமும் அதற்கு ஏற்ற பெயர்களும் ரசிகர்களிடம் மறக்க முடியாத வகையிலேயே காணப்படும்.
சமீபத்தில் அலங்கு படத்தின் பட ப்ரோமோஷனின் போது தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் காளி வெங்கட். அதாவது தனக்கு பிடித்த நாய் ஒன்றை தனது கைகளாலேயே விஷம் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டதாகவும், ஆனால் அது எப்படியோ தப்பித்து உயிர் பிழைத்ததாகவும் அதை என்னால் மறக்க முடியாது எனவும் மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் காளி வெங்கட்டின் தாயார் நேற்றைய தினம் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். தற்போது இந்த தகவல் அறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் காளி வெங்கட்டுக்கு தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!