தென்னிந்தியாவின் வடிவழகி வெற்றியாளராகவும் நடிகையாகவும் விளங்குபவரே மீனாட்சி செளத்ரி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார். அந்தவகையில் தற்போது மீனாட்சி பற்றி ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் மீனாட்சி 4 மாதங்களில் 3 வெற்றி படங்களில் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கு முதலாவது மாபெரும் வெற்றியை அளித்த படமாக " தி கோட்" காணப்படுகிறது. இந்தப் படம் வெங்கட் பிரபு இயக்கி இருந்ததுடன் நடிகர் விஜய்க்கு ஜோடியாகவும் மீனாட்சி நடித்திருந்தார்.
அத்துடன் கோட் படம் வெளியாகி கொஞ்ச நாட்களிலே 450 கோடி வசூலை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். அந்தப் படத்தை பொங்கலுக்கு வெளிவிட்டதுடன் அந்தப் படமும் 100 கோடி வசூலை படக்குழுவிற்கு பெற்றுக் கொடுத்தது.
மேலும் தெலுங்கில் சங்கராந்தி வஸ்மா படத்தில் நடிகர் வெங்கடேஸ்வருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் 300 கோடி வசூலை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு மொத்தமாக 4 மாதங்களில் சுமார் 850 கோடிகளை படக்குழுவிற்கு பெற்றுக் கொடுத்த லக்கி நாயகியாக மீனாட்சி செளத்ரி மாறியுள்ளார்.
Listen News!