• Feb 06 2025

கடவுளே அஜித்தேனு தமிழ்நாடே சும்மா அதிருது.. ஆனா நம்ம தல பண்ணிய காரியத்த பாருங்க..

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நள்ளிரவு முதலே முதலாவது காட்சியை கொண்டாடுவதற்காக தடபுடலாக பல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு துணிவு படம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல தடைகளையும் கடந்து திரைக்கு வந்துள்ளது. இதனால் அஜித்குமாரின் ரசிகர்கள் திருவிழா கோலமாக கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதி கடைசி நேரத்தில் தான் கிடைத்தது. துணிவு மற்றும் வாரிசு படம் வெளியான போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தினால் தான் அதிகாலை காட்சிக்கு தடை விதிக்க காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்போது அதையெல்லாம் மறந்து நள்ளிரவு முதலே விடாமுயற்சியை பண்டிகையாக கொண்டாடி வருகின்றார்கள்.


மேலும் நேற்று நள்ளிரவு ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் திரண்டு படத்தின் ஓபனிங்கை கொண்டாடிய நிலையில் அவர்களுக்கு காவல்துறையினரும் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இதன்போது அஜித் எங்க உயிர்.. அஜித்தே கடவுளே.. என ரசிகர்கள் கத்திக் கூச்சலிட்ட வீடியோக்களும் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகியுள்ளன.

இந்த நிலையில், அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தியேட்டர்களில் அதிரடியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், அஜித்குமார் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் போச்சுக்கல்லில் ரேஸ் ட்ராக்கில் ஜாலியாக வலம் வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக உள்ளது.

Advertisement

Advertisement