• Dec 03 2024

மேஜர் முகுந்த் சீமானின் ஸ்டுடென்ட்டா..? SK தம்பியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இதுதான்?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால் அது சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான படங்களில் அமரன் திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகின்றது.

மேஜர் முகுந்த்தின் வீர வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் மேஜர் முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவருடைய மனைவியாக சாய்பல்லவி நடிப்பில் அசத்தி இருந்தார்.

d_i_a

அமரன் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரங்களை கடக்க உள்ள நிலையில் இதன் மொத்த வசூல் 163 கோடி என கூறப்படுகிறது. ஆனாலும் இது தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இந்த படம் வெளியாகி ரசிகர்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என படம் பார்த்த அனைவரையுமே கண்கலங்க வைத்துவிட்டது. அமரன் படத்திற்கு தற்போது வரையில் பலரும் தமது பாராட்டுகளையும் வரவேற்ப்பையும் தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் அமரன் படம் பற்றியும் சிவகார்த்திகேயன் பற்றியும் சீமான் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், ஒரு நாள் சிவா தம்பி வந்து ஆர்மி படத்துல நடிக்கப் போறேன் அண்ணா எப்படி நடிக்கிறது என்று சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டார்.. உடனே எனது மாணவன் முகுந்த என்று ஒருத்தன் இருக்கான் அவன் உனக்கு பயிற்சி கொடுப்பார் என்று சொல்லி அனுப்பினேன்.. அதுதான் இன்று அமரன் படம் வெற்றி அடைய காரணம் என்று தெரிவித்துள்ளார் .

தற்போது அமரன் படத்தின் வெற்றியை பலரும் கொண்டாடி வரும் நிலையில் சீமான் இப்படி ஒரு தகவலை தெரிவித்ததாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement