• Jan 09 2026

பூஜ்யம் தான் விஜய் வந்தா எல்லாமே மாறிடாது! தமிழகத்தில் இதுதான் பெஸ்ட்! பிரபலம் பகிர்..

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் S. Ve. சேகர் தளபதி விஜய் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். தளபதி கட்சி ஆரம்பித்து விட்டார். 2026 சட்டமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்று கேட்க?


அதற்கு "2026 சட்ட மன்ற தேர்தல் மிக கடுமையாக இருக்கும். அது தவிர இன்னும் 1 வருஷம் இருக்கு அதுக்கு முன்னரே விஜய் வந்துட்டாரு அப்டினா எல்லாம் மாறிவிடாது. விஜய் வந்து இருக்காரு அவருக்கென பெரிய கூட்டம் கூடி இருக்கிறது. அந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இருக்கிறது.


ராமராஜர் கூட்டத்தின் போது 1 லட்சம் பேர் கூடினார்கள். அந்த தேர்தல்லத்தான் மிக பெரிய தோல்வியை தழுவினார். கூட்டத்துக்கும் ஒட்டுக்கும் சம்மந்தமே கிடையாது. தமிழ் நாட்டு தேர்தல் என்றால் அது திமுக, ஆதிமுக மட்டும் தான். மற்றவர்கள் சொல்லலாம் ஆனால் இவர்களுக்குத்தான் முன்னுரிமை உள்ளது.


விஜய்க்கு வயசு இருக்கு இப்பத்தான் 50 வயசு இன்னும் ஆட்சியை  தக்க வைக்க காலம் இருக்கு, 6,7 தேர்தலில் அவர் நிற்க வேண்டும், மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். முழுமனதோடு நின்றால் ஜெயிக்கலாம். இல்லனா 40துக்கு 0 தான் இருக்கும் என்று கூறியுள்ளார் S. Ve. சேகர.  

Advertisement

Advertisement