• Jan 19 2025

அமரனில் கதிகலங்க வைத்தது போதாதா? சுடச்சுட வெளியான அடுத்த அறிவிப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நடிப்பில் இறுதியாக அமரன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அமரன் திரைப்படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன் முதலாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதில் அவருடைய எமோஷனல் ரீதியான நடிப்பு பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது. இப் படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் தியேட்டரில் இருந்து வெளிவரும் போது அழுத காட்சிகளும் இணையத்தில் வைரலாக இருந்தது.

d_i_a

இந்த படத்தில் சாய் பல்லவிக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுவரையில் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த சாய் பல்லவி இந்த படத்தில் மூன்று கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிறகு சாய் பல்லவியின் மார்க்கெட்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணம் படம் இரண்டு பாகங்களாக உருவாக்க உள்ள நிலையில் அதன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 


அதன்படி ராமாயணத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கும், அதன் இரண்டாவது பாகம் 2027 ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் போட்டு தெரிவித்துள்ளனர்.

ராமாயணம் கதையை மையமாகக் கொண்டு தயாராகும் ராமாயணம் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக கேஜிஎப் நடிகர் யாஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement