தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் நேற்று இரவு உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பின்பு அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி ஆனது. அதன் பின்பு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் அனிருத் காமினேஷனில் வெளியான ஜெயிலர் படத்தில் பாடல்கள் அதிரடியாக காணப்பட்டது. இதில் வெளியான அத்தனை பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்திருந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
அதுபோலவே வேட்டையன் திரைப்படத்திலும் அனிருத் - சூப்பர் ஸ்டாரின் காமினேஷனில் வெளியான மனசிலாயோ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. இதில் மஞ்சு வாரியாரின் நடனமும் பலரையும் கவர்ந்திருந்தது.
இவ்வாறான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் தற்போது வெளியான தகவல்களின்படி, ரஜினிகாந்தின் அடிவயிற்றுக்கு அருகில் ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜினிகாந்துக்கு இதய நோய் வல்லுநர் மருத்துவர் சாய் சதீஷ் தலை மேலான மூன்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், அடி வயிற்றுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் மருத்துவர்கள் கண்காணிப்பில் காணப்படுகின்றார் ரஜினிகாந்த். இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் தான் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாகவும் அடிவயிற்றுக்கு அருகில் ஸ்டாண்ட் பொருத்தப்பட்ட பின்னர் குடும்பத்தாருடன் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!