• Jan 19 2025

4வது திருமணத்துக்கு தேதி குறிச்சாச்சு.. சிக்கிய ராபர்ட் மாஸ்டர்? இதுதான் அழைப்பிதழா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜயகுமாரின் மகள் என்ற அந்தஸ்தோடு திரைப்படங்களில் அறிமுகமானவர்தான் வனிதா விஜயகுமார். இவர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதற்கு பிறகு இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பிக் பாஸ் டைட்டிலை வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகளை பெற்றார். இதுவரையில் 17 படங்களில்  நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

வனிதாவின் மகளான ஜோவிகாவும்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திரைத் துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றார். பிக் பாஸ் வீட்டில் இவருக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் நாளடைவில் இவருடைய பேச்சுக்களால்  ரசிகர்களின் வெறுப்புக்கு உள்ளாக நேரிட்டது.

வனிதா விஜயகுமார் மனதில் பட்டதை யாருக்கு அஞ்சாமல் பேசக்கூடியவர். இதுவரை அவருடன் மோதியவர்களை கிழித்து தொங்க விட்டிருப்பார். அதே சமயம் அவர் இப்படி பேசுவது தான் அவரது குடும்பத்தினர் வனிதாவை தள்ளி வைப்பதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.


வனிதாவின் திருமண வாழ்க்கையில் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்த போதும் அவரை விவாகரத்து செய்து ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இறுதியில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் சரியாக அமையாததால் அதிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், தற்போது வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா  பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை காதலோடு பிடித்தபடி அமர்ந்துள்ளார். மேலும் அதில் சேவ் தி டேட் ஆக்டோபர் 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் வனிதா நான்காவதாக ரோபட் மாஸ்டரை திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா? இல்லை இது ஏதும் படப்பிடிப்பா? என்ற வகையில் கேள்வி கேட்டு வருகின்றார்கள். என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement