• Jan 19 2025

துப்பாக்கியை துடைக்க போய் குண்டடிபட்ட பிரபல நடிகர்? மருத்துவமனையில் அவசர அனுமதி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட மூத்த நடிகராக காணப்படுபவர் தான் கோவிந்தா. இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் படத்திலேயே முதலில் கோவிந்தாவை வைத்து தான் படம் இயக்க நினைத்ததாக கூறப்படுகின்றது. இந்திய அளவிலேயே அமிர்தாபச்சன், ஷாருக்கான், சல்மான் கானுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை போலவே நடிகர் கோவிந்தாவுக்கும் தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தனது கை துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் கோவிந்தா. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இன்றைய தினம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தாவின் காலில் குண்டடிப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய காலில் இருந்து குண்டை மருத்துவர்கள் அகற்றும் சிகிச்சையை செய்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் 60 வயதாகும் நடிகர் கோவிந்தா எதிர்பாராத விதத்தில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி அவரது காலில் குண்டடி பாய்ந்ததால் அவருக்கு பெரிதாக பாதிப்பு இல்லை என்றும் அபாய கட்டம் எல்லாம் இல்லை என்றும் ஒரு சில நாட்களில் காயம் சரியாகும். அதுவரையில் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்திருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement