தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் காணப்படும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் வெளியான படங்களில் ஆயிரம் கோடிகளை வசூலித்த படங்களும், அந்த படங்கள் ஆயிரம் கோடியை வசூலிப்பதற்கு எடுத்துக் கொண்ட நாட்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. குறித்த படங்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
d_i_a
அந்த வகையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதலாவது பாகம் பெற்ற வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமும் மூன்று வருடங்கள் கழித்து வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ஆறு நாட்களிலேயே ஆயிரம் கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டி உள்ளது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படம் காணப்படுகிறது. நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக காணப்படுகிறது. இந்த திரைப்படம் பத்து நாட்களிலேயே ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி வெற்றி படம்தான் RRR. இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன. இந்த படம் 16 நாட்களில் ஆயிரம் கோடிகளை வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் 16 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளதோடு இந்த படத்தின் மூன்றாவது பாகமும் தற்போது தயாராகி வருகின்றது.
இதை அடுத்து அட்லி தயாரிப்பில் நடிகர் ஷாருகான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை 18 நாட்களில் வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் தான் அட்லியின் சினிமா கேரியரே வேற ரேஞ்சுக்கு மாறியது.
இறுதியாக ஷாருகான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்திருந்தது. அதன்படி பதான் திரைப்படம் 27 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இவ்வாறு பாலிவுட் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் குறுகிய நாட்களுக்குள்ளேயே ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகின்றன . எனினும் தமிழ் சினிமாவில் வெளியான எந்த ஒரு படமும் இதுவரையில் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!