• Feb 16 2025

'2கே லவ் ஸ்டோரி' இயக்குநர் சுசீந்திரனுக்கு சூரி கொடுத்த பாராட்டு..

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் சுசீந்திரன். இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கை வைத்து நான் மகான் அல்ல படத்தையும்  இயக்கினார்.

சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுக நடிகர்களை வைத்து ஆதலால் காதல் செய்வீர் என்ற படமும், கிரிக்கெட்டை மையமாக கொண்டு ஜீவா படத்தையும் எடுத்தார். அந்த படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. 

ஆனால் அதற்கு பின்பு இவருடைய இயக்கத்தில் வெளியான பாயும் புலி, ஜீனியஸ், ஈஸ்வரன், வீரபாண்டியபுரம், குற்றமே குற்றம் என்ற பத்து படங்கள் தொடர்ச்சியாக ஃபிளாப் ஆகின.


இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று இயக்கிய திரைப்படம் தான் 2கே லவ் ஸ்டோரி. இந்த படம் நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இதற்கு பலரும் தமது பாசிட்டிவ் விமர்சனங்களையே அழித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், பிரபல நடிகர் சூரி 2கே லவ் ஸ்டோரி படம் பற்றியும் இதன் இயக்குநர் சுசீந்திரன் பற்றியும் கருத்து தெரிவித்து வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், வணக்கம்.. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக என்னை இந்த சினிமாக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் அண்ணன் சுசீந்திரன் அவர்களுக்கு இந்த நேரத்துல நான் நன்றி சொல்கிறேன். 

அண்ணன் சுசீந்திரன் இயற்றிய 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.. என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement