தமிழ்த் திரைத்துறையின் முக்கியமான தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. இவர் AGS Entertainment நிறுவனத்தின் முக்கிய தலைவராக உள்ளத்துடன் பல வெற்றிப் படங்களை தயாரித்தும் உள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
குறிப்பாக பிகில் , திருச்சிற்றம்பலம் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் அமோக வரவேற்பை பெற்றுக்கொண்டன. இந்நிலையில் அர்ச்சனா நேர்காணல் ஒன்றில் கலந்த வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
அதில் நடுவர், விஜய் சாரை வைத்து 70வது படம் எடுக்கப்போவதாகவும் அதை நீங்கள் தான் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் உண்மையானதா? எனக் கேட்டிருந்தார். அதற்கு அர்ச்சனா , நான் விஜய் சாரை வைத்து படம் எடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்றதுடன் அவர் படத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்தால் நான் படத்தை தயாரிக்க தொடங்கிவிடுவேன் என்றார்.
மேலும் நடுவர் அந்நேர்காணலில் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதனை பார்த்துள்ளேன் ஆனால் முதல் தடவை ஒரு தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் இருப்பதனை பார்க்கின்றேன் எனவும் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!