இந்த வாரம் 7 புதிய திரைப்படங்கள் மற்றும் ’இந்தியன்’ என மொத்தம் எட்டு படங்கள் வெளியான நிலையில் எதுவுமே பாசிட்டிவ் விமர்சனங்களை பெறாததால் கடந்த வாரம் வெளியான ’கருடன்’ மறுபடியும் சூடு பிடிக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் ’அஞ்சாமை’ ’வெப்பன்’ ‘இனி ஒரு காதல் செய்வோம்’ ’பிதா’ ’ஹரா’ ’காழ்’ மற்றும் தண்டுபாளையம் ஆகிய ஏழு திரைப்படங்களும் கமல்ஹாசனின் ’இந்தியன்’ ரீரிலீஸ் என மொத்தம் எட்டு படங்கள் ரிலீஸ் ஆகின.
இதில் ஏழு புதிய திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கவில்லை என்றும் ’அஞ்சாமை’ படத்திற்கு மட்டும் ஓரளவு சுமாரான படம் என்ற பெயரை எடுத்து இருந்தாலும் டாக்குமென்ட்ரி படம் போல் இருக்கிறது என்றும் விமர்சனம் வெளிவர தொடங்கி இருக்கிறது.
எனவே கடந்த வாரம் வெளியாகி ஏற்கனவே வசூலில் சக்கை போடு போடும் சூரியின் ’கருடன்’ திரைப்படம் இந்த வாரத்திலும் வசூலை குவிக்க தொடங்கி இருக்கிறது. ’கருடன்’ திரைப்படத்தின் பட்ஜெட் 20 கோடி ரூபாய் என்ற நிலையில் முதல் நான்கு நாட்களிலேயே இந்த படம் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை செய்து விட்டது. தற்போது ரூ.35 கோடியை தாண்டி உள்ள ’கருடன்’ வசூல் விரைவில் 50 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
’விடுதலை’ படத்தை விட அதிகமாக ’கருடன்’ படம் வசூல் செய்ததை அடுத்து சூரி காட்டில் அடைமழை என்றும் அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் கொழுந்து குவிந்து கொண்டிருப்பதால் இனி அவரை காமெடியனாக பார்க்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான ’கருடன்’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
Listen News!