• Jan 19 2025

ஹனிமூனில் விஜய் பெயரை சொல்லி மிரட்டிய சினேகா.. மலரும் நினைவுகளை பகிர்ந்த பிரசன்னா..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிரசன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஹனிமூன் சென்று இருந்த போது தனது மனைவி சினேகா விஜய்யின் பெயரைச் சொல்லி மிரட்டியதாக ஜாலியாக கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் ’அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது நடித்து வரும் சினேகா தற்போது விஜய்யுடன் ’கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் பிரசன்னா ’துப்பறிவாளன் 2’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

 இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரசன்னா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போது ’ஹனிமூன் சென்றபோது நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டுள்ளார். தாங்கள் இருவரும் ஹனிமூன் சென்று இருந்தபோது ’குஷி’ படத்தில் விஜய் காலில் கயிற்றை கட்டிக்கொண்டு புங்கீ ஜம்பிங் செய்வதுபோல் நாமும் செய்யலாம் என்று சினேகாவை அழைத்ததாகவும் ஆனால் அதற்கு சினேகா ஒரு நிபந்தனை விதித்ததாகவும் கூறினார். 

என்னுடைய பெயரை உன்னுடைய உடலில் டாட்டூ போட்டுக் கொண்டால் நான் உன்னுடன் புங்கீ ஜம்பிங் செய்ய வருகிறேன் என்று சினேகா சொன்னதாகவும் அதனை அடுத்து தான் சினேகா பெயரை டாட்டூ போட்டு கொண்டதாகவும் பிரசன்னா கூறியுள்ளார். ஹனிமூனில் நடந்த இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பிரசன்னா கூறிய நிலையில் இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement