• Oct 04 2024

மேஜர் முகுந்தனாக நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்! அமரன் திரைப்படம்...

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளிவந்த GOAT படத்தில் 'துப்பாக்கியை பிடிங்க சிவா' என விஜய் சொன்ன வசனம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையை குறித்து தான் என்றும் பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் "அமரன்". 


இப்படத்தை கமல் ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்திய ராணுவத்தில் சேவை செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர்.


அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் பிரமாண்டமான முறையில் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் தற்போது மலேசியாவில் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் கடினமான உழைப்பை போட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. 


இந்த கதாபாத்திரத்திக்காக தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். இப்படியிருக்க இந்த ரோலில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா. ரூ. 30 கோடி வரை இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. 

Advertisement

Advertisement