• Jan 18 2025

ஆண்டவர் அமெரிக்கா போனதுக்கு இதுதான் காரணமாம்! 30 வருட கனவுக்கு உயிர் கொடுக்கப்போகிறார் கமல்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசனுடைய படம் பொருளாதார அளவில் தோற்றாலும், இன்னும் 50 வருஷம் கழிச்சு தமிழ் சினிமால இதை எப்பவோ பண்ணிட்டாங்கன்னு அவருடைய படத்தை காட்டும் அளவுக்கு ஒரு லைப்ரரியை உருவாக்கி வருகிறார். அதில் அடுத்து இணைய போவது தான் அவருடைய கனவு படம். 


கமல் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "மருதநாயகம்'" தான் அந்த படம்.1997 இல் தொடங்கி இன்று வரை கமலை பார்ப்பவர்கள் எல்லோருமே கேட்கும் கேள்வி "மருதநாயகம்"எப்போ சார் வரும் என்பதுதான் அதற்கு கமலின் ஒரே பதில் அந்த சிரிப்பு தான். 


கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்பான  சூப்பர் நியூஸ் ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது கமலஹாசன் அமெரிக்காவில் தங்கி 90 நாட்கள் AI கோர்ஸ் படிக்கிறார். அவர் அதை படிப்பதற்கு காரணமே மருதநாயகம் படத்தை AI டெக்னாலஜி மூலம் எடுப்பதற்காகத்தான். பொருட்செலவில் எடுப்பதற்கு தான் தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள், தொழில்நுட்பம் என்று வரும்போது இந்த படத்தை ஈசியாக எடுத்துவிடலாம் என்பதுதான் கமலின் எண்ணம். கூடியவிரைவில் இந்த மருதநாயகம் திரைப்படத்தின் அப்டேட் நியூஸும் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement