• Oct 18 2024

வேற லெவல் டெடிகேஷன்.. சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 21’ வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 21’ படத்தின் புரமோஷன் வீடியோ இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘எஸ்கே 21’. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை உள்பட பல பகுதிகளில் நடந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் புரமோஷன் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சற்றுமுன் வெளியான இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதற்காக  எடுத்துள்ள முயற்சிகள் குறித்த காட்சிகள் இதில் உள்ளன. அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து இந்த கேரக்டருக்காக டெடிகேஷன் ஆக வேலை செய்து உள்ளார் என்பது இந்த வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. அவருடைய கடுமையான உழைப்பே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



மேலும் வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்திற்கு என்ன டைட்டில் வைத்திருப்பார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement