• Oct 16 2024

5வது திரைப்பட அப்டேட்! தனுஷுடன் இரண்டாவது முறையாக இணையும் நடிகை!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார். ப. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், அதன்பின் சில ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்கிய படம் ராயன், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ளார். 


அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இயக்குனராக ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், நடிகராகவும் தனுஷ் கைவசம் சில படங்கள் உள்ளன. இந்த கமிட்மெண்ட்ஸ் அனைத்தையும் முடித்துவிட்டு, தனுஷ் இயக்கி நடிக்கப்போகும் 5வது திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம்.


இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என சொல்லப்படுகிறது. அதே போல் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement