யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் பெரும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முதலில் குஷ்பு வருவதாக இருந்து அதன் பிறகு திடீரென அவர் வரவில்லை என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் குஷ்பு ஏன் வரவில்லை என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கலா மாஸ்டர் கூறியுள்ளார்.
ஹரிஹரன் இசை நிகழ்ச்சி நன்றாக தான் நடந்து கொண்டிருந்தது, நாங்கள் 40,000 பேர் வருவார்கள் என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால் இலவசமாக பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்ததால் தான் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதை அடுத்து நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது.
இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பது திட்டமிட்டு செய்யப்பட்ட வதந்தி, 20 நிமிடம் மட்டுமே நிகழ்ச்சி தடை பட்டது, அதன் பின்னர் சரியாக நடந்தது என்று கலா மாஸ்டர் கூறினார். மேலும் தமன்னா டான்ஸ் ஆடிய போது பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக் கொண்டதாகவும் கூறப்படுவதும் பொய்யான தகவல். தமன்னா நடனத்துடன் நாங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாக தான் முதலில் திட்டமிட்டு இருந்தோம்’ அவர் தெரிவித்தார்
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முதலில் குஷ்புவை தான் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் குஷ்புவின் வருகைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். அது முழுக்க முழுக்க அரசியல் காரணம் என்று எங்களுக்கு தெரியும். குஷ்பு காங்கிரஸில் இருந்த போது பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து குஷ்பு வரக்கூடாது என்று சிலர் குரல் கொடுத்தனர், ’எதற்கு பிரச்சினை, நீங்களே போய் வாருங்கள், நான் வரவில்லை என்று குஷ்பு கூறியதை அடுத்து தான் குஷ்பூவுக்கு பதிலாக நாங்கள் டிடியை தொகுத்து வழங்க அழைத்துச் சென்றோம் என்று கலா மாஸ்டர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சியில் பெரிய பிரச்சனை எதுவும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே சிலர் சமூக வலைதளங்களில் பிரச்சனை ஏற்பட்டதாக வதந்தியை பரப்பி வருகின்றனர் என்றும் அவர் இறுதியில் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!