• Nov 05 2024

அட்ரா சக்க..!! திருமணத்துக்கு பிறகு குட் நியூஸ் சொன்ன ஹன்சிகா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பலமொழிகளிலும் நடித்து வருகின்றார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, அதன் பின்னர் தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என வரிசையாக வெற்றி படங்களில் நடித்தார்.

மேலும் பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, வாலு, அரண்மனை 2, மனிதன் என தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவுக்கு திடீரென ஒரு சறுக்கல் ஏற்பட்டது. அதன்பின் அவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது. எனினும் அவர் அவர் தனது 50 வது படமான ’மகா’ படத்தை மலைபோல் நம்பினார். ஆனாலும் அந்த படமும் தோல்வியடைந்தது


இதைத்தொடர்ந்து ஹன்சிகா கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹேல் கட்டாரியா என்ற தனது நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது ஹன்சிகா திருமணத்துக்கு பிறகு அவருடைய ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அதாவது ஹன்சிகா தனது புதிய வீட்டில் குடியேறிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தனது கணவருடன் புதிய வீட்டிற்குள் நுழைவது மற்றும் யாகம் செய்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த  ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement