• Dec 04 2024

மீண்டும் இணையப்போகும் தனுஷ் - ஐஸ்வர்யா..! முக்கிய காரணம் இதுதான்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் ஆன நடிகர் தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். எனினும் இவர்களுக்கு இன்னும் சட்ட ரீதியாக விவாகரத்து வழங்கவில்லை.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு நடிகர் தனுஷ் உடன் காதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். சாதாரணமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையிலும் விரிசல் விழுந்தது. தனுஷின் பல வளர்ச்சிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காரணமாக இருந்துள்ளார்.

இந்த சூழலிலேயே சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டார்கள். அதில் தாங்கள் தனித்தனி வழிகளில் பயணிக்க போகின்றோம் என்று அறிவித்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். எனினும் தனுஷின் தந்தை அவர்களை இணைத்து வைப்பதற்காக தான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்.

இதை தொடர்ந்து இரண்டு வீட்டார் தரப்பிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் விடாப்படியாக இருந்தார்கள். இதனால் விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்வாறு தனுஷும் ஐஸ்வர்யாவும் இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என பேசப்பட்டது.


இந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் சுபைர் தனியார்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்களை சேர்த்து வைப்பதற்காக இரு குடும்பத்தினரும் எடுத்த முயற்சி பயன் அளிக்கவில்லை. அதனால் விவாகரத்து மனுவை தாக்கல் செய்தனர். ஆனால் இப்போது இரண்டு பேரின் மனநிலையிலும் மாற்றங்கள் வந்துள்ளன.  மகன்கள் பெரும்பாலும் தனுஷுடன் இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் இணைவதற்கு மகன்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். முக்கியமா ரஜினிக்கு நிம்மதி தேவை. ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு நடந்த திருமண பிரச்சனை அவரை பாடாய்படுத்தியது. இப்போது நிம்மதியாக இருக்கின்றார். அதேபோல ஐஸ்வர்யா விஷயத்திலும் நிம்மதி இழந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் பலமுறை இரண்டு பேரிடமும் பேசி உள்ளார். எனவே தனது அப்பாவின் நிம்மதிக்காக கூட அவர் மனம் மாறி இருக்கலாம். அதே போல தனுஷும் இப்போது நிறைய பயணப்படுகிறார் அதுவும் அவரது மனதை மாற்றியிருக்கலாம் என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement