• Oct 17 2024

சின்னத்திரை சீரியல்களிடம் தோற்றுப்போன பிக் பாஸ் குருநாதர்! TRP ல் மோசமான சரிவு

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மக்களின் பொழுது போக்குக்காக பல சேனல்கள் போட்டி போட்டு சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்பவற்றை ஒளிபரப்பாக்கி வருகின்றன.

அதில் முக்கால்வாசி மக்கள் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களுக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பெறுவதற்கான போட்டி சேனல்கள் மத்தியில் இடம் பெற்றுக் கொண்டுள்ளன.

சன் டிவி, விஜய் டிவி ஆகியவை தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில்  முதலிடத்தில் வருவதற்காக பல சீரியல்களை போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எனினும் சன் டிவி தான் முதலாவது இடத்தில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியின் சீரியல் சிறகடிக்க ஆசை முதல் இடத்தை பெற்றது. ஆனாலும் தற்போது அந்த சீரியலும் சரிவை சந்தித்துள்ளது.

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் 12க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக காணப்படுவதால் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைவாகத்தான் காணப்படுகின்றது.


இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பதிலாக சீரியலை பார்த்து விடலாம் என்று மக்கள் வெறுத்துப் போய் காணப்படுகின்றார்கள். கடந்த வாரம் விஜய் சேதுபதி தொகுத்து  வழங்கியதில் டிஆர்பி ரேட்டிங்கில் 5.72 புள்ளிகளை பெற்றுள்ளது. இறுதியாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியலை விட மோசமான  டிஆர்பி ரேட்டிங்கில் 4.27 புள்ளிகளை பெற்றுள்ளது.

இவ்வாறு சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி விட பிக் பாஸ் குறைந்த அளவில் டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணத்தினால் பிக் பாஸ் குருநாதர் ஒவ்வொரு டாக்குகளையும் சண்டைகளையும் மூட்டி விட்டு பார்க்கிறார். ஆனாலும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த சீசன் கொஞ்சம் சொதப்பலாக ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement