• Nov 05 2024

கூல் சுரேஷை யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுரனும்! செல்அம் பற்றி போட்டுடைத்த TTF வாசன்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கிய இயக்குனர் செல்அம் இயக்கத்தில் தயாராக உள்ள திரைப்படம் தான் மஞ்சள் வீரன். இந்த படத்திற்கு பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார். எனினும் சில சர்ச்சைகளால் அவர் நீக்கப்பட்டு பிக் பாஸ் பிரபலம் கூல் சுரேஷ் ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

சமீபத்தில் மஞ்சள் வீரன் பட இயக்குனர் டிடிஎஃப் வாசனை இந்த படத்தில் இருந்து நீக்கியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். அவர் படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக ஒத்துழைக்காத காரணத்தினாலேயே அவரை படத்திலிருந்து தூக்கியதாக சொல்லி இருந்தார். ஆனாலும் அதற்கு பின்பு வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன் படப்பிடிப்பே நடைபெறவில்லை. வெறும்  ஃபோட்டோ ஷுட் தான் நடந்தது என்று இயக்குனர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதை தொடர்ந்து இருவருக்கு உள்ளும் வாக்குவாதம் தொடர்ந்தது. இறுதியில் டிடிஎஃப் வாசன் ஆம்பளையாக இருந்தால் நேரில் வரட்டும் என்று இயக்குனர் சவால் விட்டு இருந்தார்.


அதன்பின்பு பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகருமான கூல் சுரேஷ் மஞ்சள் வீரன் படத்திற்கு ஹீரோவானார். இதற்கான படப்பிடிப்பு பூஜைகளும் நடைபெற்று, இணையத்தில் புகைப்படங்கள் வைரல் ஆனது.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீண்டுமொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதன்படி அவர் வழங்கிய பேட்டியில், நான் படத்தில் இருக்கும் போது கூல் சுரேஷ் அண்ணாவுக்கு ஒரு நல்ல ரோல் கேட்டேன். 

அதற்கு இயக்குனர் செல்அம் அவர் ஒரு பாட்டுக்கு தான் வருவாரு. அவரை எல்லாம் அப்படி தான் யூஸ் பண்ணிட்டு தூக்கி போடணும் என்று சொன்னார் என கூறியுள்ளார்.

இவ்வாறு கூல் சுரேஷ் பற்றி இயக்குனர் செல்அம் பேசியதை டிடிஎஃப் வாசன் போட்டு உடைத்துள்ளார். இனி என்ன நடக்குது என்று பார்ப்போம். 


Advertisement

Advertisement