• Jan 18 2025

காதல் குறித்து ஒப்பான பேசிய நடிகை சுனைனா... வெளியான ரகசியம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் நடிகை. இவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


சமீபத்தில் இவர் ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது, அது பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.


இந்நிலையில், பேட்டி ஒன்றில் உங்கள் காதல் வாழ்க்கை குறித்து கூறுமாறு கேட்டார். " நான் சினிமாவை மட்டும் தான் காதலிக்கிறேன் என் தனிப்பட்ட நேரத்தில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அதை என் பொழுதுப்போக்காக பார்க்காமல் படங்கள் மூலம் பலவற்றை கற்று கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அந்த புகைப்படம் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.   

Advertisement

Advertisement