• Jan 19 2025

சவாலாக உள்ளது! வித்தியாசமான கதாபாத்திரம்! "இட்லி கடை" குறித்து நித்தியா மெனன்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நித்தியா மெனன்.


அவர் நடிப்பில் வெளியான, 'காஞ்சனா - 2', 'ஒகே கண்மணி', 'மெர்சல்', 'திருச்சிற்றம்பலம்' ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. சில நாள்களுக்கு முன்புதான் நான் இட்லி கடை படத்தில் சில காட்சிகளில் நடித்தேன்.


இந்தப் படத்தை தனுஷ் இயக்குகிறார். இப்போதுதான் தொடங்கியுள்ளோம்.அதனால் வேறு தகவல் எதுவும் கூற இயலாது. நான் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது என்னுடைய இயல்பு தன்மையிலிருந்து வேறு மாதிரி இருந்தது.


இந்தப் படம் அதைவிட இரண்டு மடங்கு இருக்கும். இதுவரை என்னை யாரும் படம்பிடிக்காத கதாபாத்திரத்தில் தனுஷ் இயக்கிவருகிறார். தனுஷ் எப்போது எனக்கு சவாலான படங்களையே தருகிறார் என்று கூறினார்.

Advertisement

Advertisement