• Jan 19 2025

சீதாவின் கல்யாண விஷயத்தில் முத்து எடுத்த அதிரடி முடிவு? மனோஜ் கிளப்பிய புது பிரச்சினை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதாவின் கல்யாண விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்ல, அவர் இப்ப என்ன அவசரம்? அவளுக்கு சின்ன வயசு என சொல்லுகிறார். ஆனாலும் மீனா எடுத்து சொல்ல, முத்துவும் சரியென சொல்லுகிறார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ் தான் இந்த மாதம் 50,000 காசு தர மாட்டேன் என்று சொல்கின்றார். என்ன நடந்தது என்று கேட்க, எல்லாம் உன்னால தான் என்று முத்துவிற்கு திட்டுகின்றார். அதன்பின்பு பாடிகார்ட்டுக்கு அடித்த விஷயத்தில் அவர்கள் வந்து சாமான்களை கொண்டு போனதாக சொல்கின்றார்.

அதற்கு அண்ணாமலை நீ ஒவ்வொரு மாதமும் ஒரு காரணமாக சொல்லிக் கொண்டிருக்கின்றாய் என்று சொல்ல, விஜயா மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணுகிறார். ஆனாலும் அண்ணாமலை முத்துவும் உனது பிள்ளை தான் அவரைப் பற்றியும் யோசி என்று சொல்லுகின்றார்.


மறுபக்கம் சீதா தனது அம்மாவிடம் தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்று சண்டை போடுகின்றார். அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் அங்கு செல்லுகின்றார்கள். சீதா எதற்காக கல்யாணம் வேணாம் என்று சொல்கின்றாய் என்று கேட்க, தான் இப்போது தான் வேலைக்கு போகிறேன். இன்னும் உயர வேண்டும் என்று சொல்லுகின்றார்.

இறுதியாக முத்து சொன்னதற்கு அமைய சீதா சம்மதம் தெரிவிக்கின்றார். அதன் பின்பு மாப்பிள்ளை வீட்டில் இருந்து அவருடைய பெற்றோர்கள் வந்து சீதாவைப் பெண் பார்க்கின்றார்கள் அவர்களுக்கு சீதாவை மிகவும் பிடித்து போகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement